ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களை கொண்டது என்று சொல்லப்பட்டுள்ளது அதேப்போல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்த தகவல் தெரிய வருகிறது.. இப்ப உள்ளவை தவிர மற்ற கோவில்கள் கடலுக்குள் மூழ்கி இருக்க வாய்ப்பு உண்டு.
மாமல்லபுரம் சிற்பக் கோவிலிலிருந்து கடலுக்குள் 500 மீட்டர் தொலைவில்2,500 சதுர மீட்டரில் கடலுக்குள் அகழ்வாராய்ச்சி நடந்தது. கடலுக்கு அடியில் 6 முதல் 8 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வித்தியாசமான,படிவங்கள், பழங்கால .பொருட்கள், பாறைகள்,கிரானைட்டால் மனிதர்களால் செதுக்கப்பட்ட படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருகிறது.
இங்கே எடுக்கப்பட்ட கல்வெட்டு மாதிரிகளிலிருந்து தமிழகத்தை ஏற்கனவே இதுவரை மூன்று முறை ஆழிப் பேரலை தாக்கியிருப்பதற்கான அடையாளங்கள் இங்கு கிடைதிருப்பதாக தொல்பொருள் துறையினர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த இடம் மாமல்லபுரம் துறைமுகமா இருந்ததா? இல்ல கோட்டை போன்ற அமைப்பா? என்று ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்ல வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் மாமல்லபுரம் கடலுக்குள் அரிய வரலாற்று பொக்கிஷங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment